Saturday, April 24, 2010

சோலார் செல்- நிதி விவரங்கள்

வீட்டிற்கு சோலார் செல் மூலம் மின்சாரம் அளிக்க எவ்வளவு செலவு ஆகும்? மானியம் எங்கே கிடைக்கும்? என்பது பற்றிய கேள்விகளை வலை நண்பர்கள் கேட்டிருக்கின்றார்கள். என் நண்பர் ஒருவர் மகாராஷ்டிரா, புனாவில் சோலார் செல் பிசினஸ் நடத்துகிறார். அவரிடமிருந்து கேட்டுப் பெற்ற தகவல்களை இங்கே கொடுக்கிறேன்.

வீட்டிற்கு : உங்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு சுமார் 100லிருந்து 150 யூனிட் வரை மின்சரம் செலவானால், ஒரு கிலோவாட் சோலார் சிஸ்டம் போதுமானது. (மின்சார பில் பல இடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் வரும். அதனால், 2 மாதத்திற்கு 200லிருந்து 300 யூனிட் செலவு என்று சொல்லலாம்). இதற்கு 2 லட்சம் வரை செலவாகும். உங்கள் கையிலிருந்து 1.1 லட்சம் செலவாகும். மீதி 90 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும்.

உங்களுக்கு சோலார் சிஸ்டம் சப்ளை செய்யும் நிறுவனமே மானியத்தை வாங்கிக் கொள்ளும். அதாவது நீங்கள் 1.1 லட்சத்திற்கு செக் கொடுத்தால் போதும், மற்றபடி மானிய அப்ளிகேசன் பார்மில் கையெழுத்துப் போட்டால், மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

எடுத்துக்காட்டாக, டிரைவிங் ஸ்கூலில் சென்று மொத்தமாகப் பணம் கொடுத்தால், அவர்களே எல்லா அப்ளிகேசனையும் நிரப்பிக் கொடுப்பார்கள். நீங்கள் கையெழுத்து மட்டும் போட்டால் போதும். ஆர்.டீ.ஓ. ஆபிசில் யாரையும் பார்த்து நேரடியாக தனித்தனியாக லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. டிரைவிங் லைசன்ஸ் கிடைத்துவிடும். அது போல, சோலாரிலும் மானியம் பற்றிய விவரங்களை உங்களுக்கு விற்பவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

இந்த மானியத் தொகையை மத்திய அரசு கொடுக்கிறது. இது 100 ரூபாய் சிஸ்டத்திற்கு 50 ரூபாய் வரை கிடைக்கும். மானியம் வாங்க லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதால் இது சுமார் 45 ரூபாயாக மாறும். என்னைக் கேட்டால், இந்த விசயங்களில் நாம் 5 ரூபாய்க்காக தலையைப் பிய்த்துக் கொள்ளாமல் , போனால் போகட்டும் என்று ‘அவுட்சோர்ஸ்' செய்வதுதான் நல்லது.

நியாயமாகப் பார்த்தால், வீட்டிற்கு சோலார் செல் வாங்க, இந்த 1.1 லட்சம் கூட உங்கள் கையில் இருக்க வேண்டியதில்லை. மத்திய அரசின் திட்டப்படி, வங்கிகள் குறைந்த வட்டி (7.5%) கடன் கொடுக்கும். ஆனால், தமிழ்நாட்டில் இது எப்படி வாங்குவது , எந்த வங்கியில் சுலபமாகக் கிடைக்கும் என்ற விவரம் என் நண்பருக்கு தெரியவில்லை. ”மகாராஷ்டிராவில் இதையும் நானே கவனித்துக் கொள்வேன், தமிழகத்தில் சொல்ல முடியாது” என்று சொன்னார். அதனால் இப்போதைக்கு இந்த 1.1 லட்சத்தை உங்கள் கையில் இருந்துதான் போடவேண்டும் அல்லது நீங்களே அலைந்து லோன் வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.

வீட்டில் சோலார் செல் மின்சாரம் பயன்படுத்துவதில் இன்னொரு விசயம் இருக்கிறது.. ஏ.சி. மற்றும் வாசிங் மெசின், வாட்டர் ஹீட்டர் மற்றும் போர்வெல் பம்பு, இவை நான்கும் சுவிட்சு பட்டதும் ஆரம்பத்தில் அதிக கரண்டு இழுக்கும். இவற்றை சமாளிக்க இந்த 1 கிலோவாட் சிஸ்டம் பத்தாது.

”எனக்கு எல்லாமே சோலாரில் ஓட வேண்டும்” என்றால் என்ன செய்வது?

இதற்கு குறைந்த பட்சம் 2 கிலோ வாட் சிஸ்டமாவது வேண்டும். இது தவிர, ‘சாஃப்ட் ஸ்டார்ட்” (Soft start) அல்லது ”மெதுவாக தொடங்கும்” சாதனம் தேவைப்படும். இதனால் விலை கொஞ்சம் அதிகமாகும். இதை வைத்து ஏசி, வாசிங் மெசின், வீட்டிற்கு போர்வெல் பம்பு ஓட்டலாம்.

வாட்டர் ஹீட்டருக்கு, நேரடியாக சோலார் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவதுதான் நல்லது. அது சுமார் ரூபாய் 15 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் ஆகலாம். சோலார் செல்லில் மின்சாரம் எடுத்து, பேட்டரியில் சேர்த்து, அப்புறம் சாப்ட் ஸ்டார்டர் வைத்து எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவது “ரொம்ப ஓவர்” என்று நண்பர் சொன்னார்!

”மொத்தத்தில் நீங்கள் ரெகமண்ட் செய்வது என்ன” என்று கேட்டால், “வீட்டில் இருக்கும் விளக்குகள், மின் விசிறி , ஃப்ரிஜ், கம்ப்யூட்டர், டி.வி. , மிக்சி இதை எல்லாம் சோலாரில் ஓட்டுங்கள். ஏசி, வாசிங் மெசின் இதை எல்லாம் அரசு மின் இணைப்பில் ஓட்டுங்கள், அதுதான் சுலபம், எகனாமிகல்”.


”நாலு நாள் மேக மூட்டமாக இருந்தால் சோலார் கரண்டு வராதே, என்ன செய்வது?”

”உங்கள் வீட்டில் அரசு மின் இணைப்பு இருக்கட்டும், துண்டிக்க வேண்டாம். சோலார் மின்சாரம் இல்லாவிட்டால், தானாகவே (automatic) அரசு மின் இணைப்பு மூலம் மின்சாரம் வரும் வகையில் இணைப்பை கொடுக்கலாம். ”

அதாவது, பேட்டரியில் சார்ஜ் இருக்கும் வரை அரசு மின்சார மீட்டர் ஓடாது. பேட்டரி தீர்ந்து விட்டால், மீட்டர் ஓடும். மறுபடி பேட்டரி சார்ஜ் ஆனால், அரசு மீட்டர் ஓடாது என்ற வகையில் இருக்கும்.

இந்த பேட்டரிகள், ‘லோ மெயிண்டெனன்ஸ் ” (Low maintenance) என்ற வகையைச் சார்ந்தவை. வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் செலவில் “AMC" (annual maintenance contract) போட்டால், கம்பெனி ஆள் 6 மாதத்திற்கு ஒரு முறை வந்து இவற்றை கிளீன் செய்து செல்வார். இந்த பேட்டரியில் தண்ணீர் அல்லது ஆசிட் சேர்க்க வேண்டிய தேவை இருக்காது.

வியாபாரத்திற்கு: இதையே உங்கள் கடைக்கு சோலார் செல் மின்சாரம் வேண்டும் என்றால், மானியம் வீட்டுக்கு கிடைப்பது போலவே கிடக்கும். ஆனால் கடன் மட்டும் இவ்வளவு குறைந்த வட்டியில் கிடையாது. கமர்சியல் ரேட்டில்தான் கிடைக்கும்.


டிஸ்கி: எனக்கு இந்த நண்பரை 17 ஆண்டுகளாகத் தெரியும் என்பதால் எனக்கு அவர் சொல்வதில் முழு நம்பிக்கை உண்டு . அதனால் அவர் சொல்வதை அப்படியே கொடுத்திருக்கிறேன்.

எனது வலைப் பதிவுகள் முடிந்த வரை அறிவியல் பதிவுகளாகவே வைக்க நினைக்கிறேன். அறிவியல் பதிவு என்ற பெயரில் வியாபாரப் பதிவுகளாக்க விரும்பவில்லை. மேலதிக கமர்சியல் விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், நேரடியாக இந்த நண்பரையோ அல்லது வேறு கமர்சியல் நிறுவனங்களையோ தொடர்பு கொள்ளலாம். சோலார் செல் பிசினஸ் செய்யும் நண்பரின் தொடர்பு விவரங்கள் தெரிய ‘scienceintamil' AT gmail.com என்ற முகவரிக்கு தனிமடல் அனுப்பவும்.

12 comments:

  1. எங்கெங்க.. குளிர்சாதனம் இயக்க கூட அருகதையில்லாத மின் அழுத்தம் தான் கிடைக்குது சென்னையின் பல பகுதிகளில் இதில் அவர்களின் மின்சாரத்தை எப்படி உபயோகிப்பது?

    ReplyDelete
  2. நல்ல பதிவு. www.tatabpsolar.com வலைத்தளத்தில் மேலும் பல தகவல்களைப் பெறலாம். TATA என்பது ஒரு நல்ல பிராண்டாக இருக்கும்... விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்...

    ReplyDelete
  3. நன்றி வடுவூர் குமார் மற்றும் சாணக்கியன் அவர்களே.

    போதுமான அளவு மின்சாரம் இல்லை என்றால் மின் அழுத்தப் பிரச்சனை தானாக வருகிறது.

    Tata BP நல்ல கம்பெனி. அவர்கள் சிறிய வேலைகளை (எ.கா. ஒரு வீட்டிற்கு சோலார் செல் போட வேண்டும் என்றால்) செய்கிறார்களா என்று தெரியவில்லை.

    சிலிக்கன் சில்லு போல இல்லாமல், இந்தியாவிலேயே சோலார் செல் தயாரிக்கும் டெக்னாலஜி பல நிறுவனங்களிடம் இருக்கிறது என்பது ஒரு நல்ல விசயம். பல விதமான சோலர் செல்களையும் நம்மால் தயாரிக்க முடியும். சில வகைகளில் உலகில் எவருக்கும் ஈடாக (தரத்தில், விலையில்) நம்மால் தயாரிக்க முடியும். சோலார் செல்களின் வகைகள் பற்றி ஒரு சில நாட்களில் பதிவு எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. நன்றி இந்தியன் அவர்களே.

    ReplyDelete
  5. தமிழ் நாட்டில் அனுகவேண்டிய இடம் சொல்லுங்களேன்

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி சத்யா மற்றும் ஞானசேகர் அவர்களே. தமிழ்நாட்டில் இருக்கும் சோலார்செல் விற்பனையாளர்கள் பற்றி எனக்கு தெரியவில்லை. குறிப்பாக, சிறு வேலைகள் (வீடு, அலுவலகம் போன்றவை) செய்பவர்கள், அவர்கள் நம்பகத்தன்மை, தொழில்நுட்ப திறமை பற்றி தெரியாது.

    ReplyDelete
  7. I am a solar professional, you may ask me any questions regardsing the solar power - rooftop systems for houses, commercials, Institutes, industries etc. mail your questions ftsaleem@gmail.com

    ReplyDelete
  8. migaum payan tharakkoodiya thagaval. nantry!

    ReplyDelete
  9. சோலார் குறித்து இலவச ஆலோசனையும் திட்டமிடலும் செய்து தரப்படும்.. +91 96885 32123 . tigerpowersystems@gmail.com

    ReplyDelete