1. எரிமக் கலன் - அட்டவணை
 2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
 3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
 4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
 5. காலத்தின் வரலாறு - அட்டவணை
 6. சோலார் செல் அட்டவணை

Saturday, June 21, 2008

காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் - அட்டவணை (Airp Pollution Control - Index)

காற்றில் மாசு கணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான பதிவுகளை இங்கு தொகுத்திருக்கிறேன்.

 1. தொடக்கம் (Introduction). இதில், தூய்மையான காற்றின் முக்கியத்துவம் பற்றி கருத்துக்கள், மற்றும் காற்றில் இருக்கும் மாசுக்களை பொதுவாக எப்படி வகைப்படுத்துவது ஆகியவை இருக்கின்றன.

 2. கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு மாசுக்கள் பற்றிய விவரங்கள் இரண்டாம் பதிவில்.

 3. கந்தக வாயு, ஓசோன், VOC என்ற ”எளிதில் ஆவியாகும் பொருள்கள்” என்ற மூன்று வகை மாசுக்கள் பற்றி, மூன்றாம் பதிவில்.

 4. நான்காம் பதிவில், ஒரு ஊரில் அல்லது பகுதி(area)யில் காற்றில் சேரும் மாசின் அளவை கணிப்பது எப்படி (how to estimate the pollution level)என்பது பற்றிய விவரங்கள்

 5. ஐந்தாம் பதிவில், காற்றில் இருக்கும் மாசுக்களை அளப்பது எவ்வாறு (Measuring or monitoring pollution level) என்பது பற்றிய விவரங்கள் உள்ளன.

 6. ஆறாவது பதிவில், காற்றில் சேரும் மாசுக்கள் எவ்வளவு பரவுகின்றன என்பது பற்றிய விவரங்கள் உள்ளன. இதை கணக்கிட, (என் முதல் முயற்சியாக) தமிழ் மென்பொருளும் அப்பதிவில் இருக்கிறது.

 7. அடுத்து, ஏழாவது பதிவில், காற்றில் இருக்கும் மாசை ஆராய்வதன் மூலம், எதிலிருந்து மாசு வருகிறது என்று கணக்கிடுவது பற்றிய விவரங்கள் (How to reverse calculate the source of pollution, from analyzing the pollutants)

4 comments:

வசந்தத்தின் தூதுவன் said...

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை எளிய தமிழில் தரும் உங்கள் முயற்சி வெல்க. உங்கள் முயற்சிகளை அடியொற்றி அனைத்து தமிழ் தொழில் நுட்ப வல்லுனர்களும் எல்லா துறை சார்ந்த பாடப் புத்தகங்களையும் தமிழில் தந்து, தமிழிலேயே ஆரம்பக் கல்வி முதல் , மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற உயர் கல்வி வரை தமிழர் தமிழில் கற்கும் நிலை வர வாழ்த்துக்கள்.

S. Ramanathan said...

வருகைக்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி பொதிகை செல்வன் அவர்களே. பொறியியல் / மருத்துவ கல்விகளுக்கு தமிழில் எழுதினால் புரிதல் சுலபமாக இருக்கும். ஆனால் தமிழ் நாட்டிலேயே வேலை கிடைக்காவிட்டால் யாரும் அதை பட்டத்திற்காக எடுத்து படிக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். எனக்கு தெரிந்து, ஜப்பான், ரஷ்யா, சீனா , பிரான்சு மற்றும் ஜெர்மனியில் மட்டும் தங்கள் மொழியிலேயே பொறியியல் கல்வி கற்று நல்ல வேலையில் இருக்க முடியும். மற்ற நாடுகளில் ஆங்கிலத்தில் கற்பதே பெரும்பான்மை என நினைக்கிறேன் (விவரம் தெரிந்தவர்கள் திருத்தவும்). தமிழ்நாட்டிலும் அடுத்த சில வருடங்களில் (near future) இந்நிலை மாறாது என நினைக்கிறேன்.

எனவே, இங்கு நான் எழுதுவது தமிழ் தெரிந்தவர்களுக்கு துறைசார் விவரங்கள் எளிதில் புரிவதற்குதான். ஒருவேளை நான் நினைப்பதற்கு மாறாக, தமிழில் உயர்கல்வி கற்று நல்ல வேலை கிடைக்கும் நாள் விரைவில் வந்தால் மகிழ்ச்சியே!

கூடுதுறை said...

மிக நல்லபதிவுகள்...

தமிழில் இது போன்ற அறிவியல் பதிவுகள் வரவேண்டும்

நன்றி

S. Ramanathan said...

நன்றி கூடுதுறை அவர்களே.