1. எரிமக் கலன் - அட்டவணை
 2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
 3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
 4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
 5. காலத்தின் வரலாறு - அட்டவணை
 6. சோலார் செல் அட்டவணை

Tuesday, September 23, 2008

காலத்தின் வரலாறு - அட்டவணை

காலத்தின் வரலாறு என்ற புத்தகத்தின் அதிகாரபூர்வமற்ற தமிழாக்கம், ஒலி வடிவில் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. பல பதிவுகள் இன்னும் தயாராகவில்லை. அவை வலையில் பதிந்தவுடன் இணைப்புக் கொடுக்கப்படும். இதுவரை வந்த பதிவுகளின் தொகுப்பு கீழே இருக்கிறது.

 1. தொடக்கம். இந்த பிரபஞ்சம் அல்லது அண்டம் என்பதைப் பற்றி இதற்கு முன் தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும் என்ன சொன்னார்கள், தற்போது அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.


 2. இடமும் காலமும். இரண்டாம் அத்தியாயம். இடம் மற்றும் காலம் (Space and Time) பற்றி விஞ்ஞானிகள் சொல்வது என்ன என்பதைப் பற்றிய பதிவுகள்.


 3. அண்டத்தில் இருக்கும் விண்மீன்கள் விலகிச் செல்கின்றன, விரிந்து செல்லும் அண்டம்.
  இதை எப்படி கண்டுபிடித்தோம், இதனால் அண்டம் உருவான விதம் பற்றி என்ன சொல்ல முடியும் என்பது பற்றிய விவரங்களை இந்தப் பகுதிகளில் பார்க்கலாம்.


 4. குவாண்டம் இயற்பியல் நிச்சயமற்ற கோட்பாடு. (uncertainity principle) குவாண்டம் இயற்பியல் பற்றி, (குறிப்பாக இந்த புத்தகத்தின் பிற்பகுதிகளில் வரும் கருத்துக்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு தேவையானவற்றை ) இந்த பகுதிகளில் கேட்கலாம்.


 5. இயற்கையில் இருக்கும் எலக்ட்ரான் , புரோட்டான் போன்ற துகள்களைப் பற்றியும், ஈர்ப்பு விசை, மின்காந்த விசை போன்ற அடிப்படை விசை (fundamental forces) பற்றியும் இந்த பகுதிகளில் பார்க்கலாம். 6. கருங்குழிகள். மிகப் பெரிய விண்மீனானது, ஈர்ப்பு விசை மூலம் கருங்குழி என்ற பொருளாக மாறுவது எப்படி, அதன் தன்மை என்ன என்பது பற்றிய பதிவுகள். 7. கருங்குழி ஒளியைக் கூட விழுங்கும் தன்மை கொண்டது. அதிலிருந்து ஒளி வெளிவரும் என்று பின்னர் நிரூபிக்கப் பட்டது. இதற்கு குவாண்டம் இயற்பியல்தான் அடிப்படைக் காரணம். அது எப்படி என விளக்கும் பதிவுகள்.


 8. பிரபஞ்சம் ஆரம்பித்த விதம் பற்றியும், அது எப்படி முடிவடையும் என்பது பற்றியும் விஞ்ஞானிகளின் கருத்துக்களை இங்கு பார்க்கலாம். இது கொஞ்சம் பெரிய அத்தியாயம் என்பதால் 11 ஒலிப்பதிவுகள் இருக்கின்றன.


 9. நேரம் அல்லது காலம், எப்பொழுதும் முன்னால்தான் போகிறது. நம்மால் பழைய காலத்திற்கு செல்லவே முடியாது. அது ஏன், இது நாம் ‘உணர்வது' மட்டும்தானா, அல்லது அறிவியலில் இதைப் போல வேறு எதுவும் உண்டா என்பதை விளக்கும் பதிவுகள்.


 10. இயற்பியல் கொள்கைகளை ஒன்றுசேர்த்தல். இப்போது ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, குவாண்டம் இயற்பியல், சார்பியல் என்று பல வேறு சமன்பாடுகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரே ஒரு சமன்பாடு கொண்டு வர முடியுமா? அது எப்படி இருக்கும், அதனால் என்ன பயன் என்ற விவாதங்கள்.


 11. . முடிவுரை. இதுவரை பார்த்த பதிவுகளின் சுருக்கம்.


 12. வரலாற்றுக் குறிப்புகள்

No comments: