1. எரிமக் கலன் - அட்டவணை
 2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
 3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
 4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
 5. காலத்தின் வரலாறு - அட்டவணை
 6. சோலார் செல் அட்டவணை

Sunday, August 29, 2010

சோலார் செல்- அட்டவணை

சோலார் செல் (Solar Photovoltaic cell) பற்றிய விவ்ரங்களை சில பதிவுகளில் எழுதி இருக்கிறேன். சில பதிவுகள் இனிமேல் வரும். அனைத்தையும் இந்த அட்டவணையில் தொகுத்திருக்கிறேன்.


 1. அறிமுகம் (Introduction). இந்தப் பதிவில், மேலோட்டமாக , சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்தால், தற்சமயம் எங்கு பயன்படுத்தினால் நல்லது (Economical), அது டீசல் ஜெனரேட்டரை விட எந்த விதத்தில் உயர்ந்தது, என்ன குறைகள், வீட்டிற்கு பயன்படுத்த என்ன கருவிகள் வேண்டும், இந்திய அரசு என்ன விதத்தில் மானியம் தருகிறது போன்ற விவரங்களைப் பார்க்கலாம்.


 2. நிதி விவரங்கள் (Economics). ஒரு வீட்டில் சோலார் செல் மூலம் மின்சாரம் பயன்படுத்துவது என்றால் எவ்வளவு செல்வு ஆகும், அதை எப்படி கணக்கிட வேண்டும் என்பது பற்றிய மேலோட்டமான பதிவு


 3. சூரிய ஒளி பற்றி சில விவரங்கள். இது சோலார் செல்லின் வடிவமைப்பு , செயல்பாடு பற்றி நாம் பின்னால் படிக்கும் போது, ”ஏன் இப்படி?” என்ற சில கேள்விகளுக்கு விடை தரும். இதை scientific background material / ”தெரிந்து கொள்ள வேண்டிய அறிவியல் விவரங்கள்” என்று வைத்துக் கொள்ளலாம்.


 4. சோலார் செல் வேலை செய்வது எப்படி என்பது பற்றிய ஒரு பொதுவான பதிவு. சூரிய ஒளி சோலார் செல்லில் இருக்கும் வகைகள் பற்றியும் இதில் இருக்கும்.


  ஒவ்வொரு வகையிலும் இருக்கும் விவரங்களையும், அவை ஒவ்வொன்றும் எப்படி வேலை செய்கின்றன, அவற்றின் நிறை, குறைகளப் பற்றி பின்னால் தனித்தனிப் பதிவாக பார்க்கலாம். 5. சோலார் பேனல் நகர்த்துவது (Solar Panel Tracking) : சோலார் பேனல் என்பது பல சோலார் செல்களை இணைத்து செய்வது. இதை நாம் மொட்டை மாடியில் எந்த விதத்தில் வைக்க வேண்டும். இதை காலை முதல் மாலை வரை, சூரிய காந்திப் பூவைப் போல எப்படி நகர்த்தினால், அதிக பலன் என்பது பற்றிய விவரங்கள் கொண்ட பதிவு


 6. சோலார் செல்: சில அறிவியல் நுணுக்கங்கள் (Maximum Power Point Tracking): இந்தப் பதிவில் (அ) சோலார் செல்லுக்கும் மின்கலனுக்கும் (Battery) இருக்கும் வித்தியாசங்கள் பற்றியும் (ஆ) சோலார் செல்லில் எப்படி மின்சாரம் எடுத்தால் அதிக பலன் இருக்கும் , MPPT என்றால் என்ன என்பது பற்றிய விவரங்களும் இருக்கும்.
 7. க்ரிஸ்டலைன் சிலிக்கன் சோலார் செல்: இது ஒருவகையான சோலார் செல். இது எப்படி இருக்கும், எப்படி வேலை செய்கிறது, இப்போதைய நிலமை என்ன என்பது பற்றிய விவரங்கள்.

 8. பகுதி 1 9. அமார்ஃபஸ் சிலிக்கன் சோலார் செல்

 10. அடுத்து எழுத நினைப்பவை:
 11. காட்மியம் டெலுரைடு சோலார் செல்


 12. சி.ஐ.ஜி.எஸ். (CIGS) சோலார் செல்

 13. பகுதி 1
  பகுதி 2

 14. டீ.எஸ்.எஸ். சி. (DSSC) சோலார் செல்:

 15. பகுதி 1 , மற்றும் பகுதி 2

 16. சோலார் செல்- நிதி விவரங்களைக் கணக்கிடுதல் (எ.கா.) கடைசியில் உங்கள் வீட்டிற்கு ஓரளவு மின்சாரமாவது சூரிய ஒளியில் எடுக்க வேண்டும் என்றால் என்ன வாங்க வேண்டும், எங்கே வாங்கலாம், எவ்வளவு செலவு ஆகும் , லாப நஷ்டக் கணக்கு என்று (எனக்கு தெரிந்த வரை) முழு விவரங்களுடன் பார்க்கலாம். இதில், ‘நிதி விவரங்கள்’ பதிவை விட அதிக அள்வு விவரங்கள் (complete details) இருக்கும்.

5 comments:

Anonymous said...

உங்கள் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. http://blogintamil.blogspot.com.

நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்

S. Ramanathan said...

நன்றி மயில் அவர்களே.

Kanchisundram said...

Dear Sir,

I want to start solar power plant in tamilnadu, i have 2 acre land in trivellore dist, i want sell the current to govt for that what is the procedure. i am waiting for your reply if possible we will meet in once.

Thanks & Regards
S.Sundar

S. Ramanathan said...

வருகைக்கு நன்றி சுந்தர் அவர்களே. உங்கள்

எனக்கு அரசாங்க விதிமுறை பற்றீ மேலோட்டமாகத்தான் தெரியும், எந்த ஆபிசுக்கு எதற்கு போகவேண்டும் என்ற முழு விவரமும் தெரியாது. இரு ஏக்கரில் வரும் மின்சாரத்தை அரசு வாங்காது என்று நினைக்கிறேன் (குறைந்த பட்சம் 50+ ஏக்கர், ஏனென்றால் ஒரு சில மெகாவாட்டுகளாவது வேண்டும்)

எதற்கும் உங்கள் மின்னஞ்சலை தெரியப் படுத்தினால், தொடர்புகொள்கிறேன். நான் அடுத்து இரு வாரங்களாக ஊரில் இல்லை. டிசம்பர் ஐந்துக்கு பிறகு நிச்சயம் தொடர்புகொள்வேன்.

FTS said...

dear mr ramanathan
pls tell me how to write comments in tamil. as regards solar power, you require min 5Acre land for 1Megawatt solar system. we can export power to the Rural Electrification Corpn. any queries regarding the solar system can be discussed.
regards
saleem