1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Tuesday, December 30, 2008

செம் கருவியில் எடுத்த சில படங்கள்.

செம் கருவியை, ஒரு 'அதிக திறன் வாய்ந்த மைக்ரோஸ்கோப்' போல கருதலாம் என்று முன்னால் பார்த்தோம். எடுத்துக்காட்டாக சில படங்கள். (இவற்றின் காபிரைட் அமெரிக்காவின் ATC labக்கு தான் இருக்கிறது. http://www.atclabs.com/Photos.htm இருந்தாலும்.... )

ஒரு ஈ, செம் கருவியில்.....

அந்த ஈ மேலே ஒரு பூச்சி (ஒட்டுண்ணி?) இருக்கிறது. அதை மஞ்சள் நிற வட்டத்தில் குறித்திருக்கிறார்கள்.


அந்த பூச்சியை மட்டும் ஜூம் செய்து எடுத்த படம்...



ஒரு சிலந்தியின் படம்...



இவை எல்லாம் ஒரு எடுத்துக் காட்டாக கொடுத்திருக்கிறேன். இதைவிட சிறிய பல பொருள்களை செம் கருவியில் பார்க்கலாம் என்றாலும், ஈ, சிலந்தி ஆகியவற்றை இவ்வளவு பெரிதாக்குவது என்றால் என்ன என்பது பற்றி நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். மற்றபடிக்கு ஒரு நே.மீ.க்கும், அம்பது நே.மீ.க்கும் உள்ள வித்தியாசம் பற்றி கற்பனை செய்வது கடினம், ஏனென்றால் அவற்றை அன்றாட வாழ்வில் நாம் உணர்வது இல்லை.

2 comments:

வடுவூர் குமார் said...

இப்ப புரியுது இதோட பயண்பாடு.
பெட் மைட்ஸ் என்று விளம்பரபடுத்தி வேக்வம் கிளீனர் வாங்க பயன்படுத்துவார்களே அது ஞாபகத்துக்கு வருகிறது.

KarthigaVasudevan said...

கொஞ்சம் புரியலை...ஆனா வாசிக்க இன்ட்ரஸ்டிங்கா இருக்கு உங்கள் பதிவுகள்.பயனுள்ள பதிவு.